உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரஜினி படத்தில் வில்லனாக நடித்த ஹீரோக்கள்

ரஜினி படத்தில் வில்லனாக நடித்த ஹீரோக்கள்

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினி நடிக்கும் தர்மன் படத்தில் தெலுங்கு நடிகர் ராம் பொதிதேனி வில்லன் என தகவல்கள் வருகின்றன. லிங்குசாமி இயக்கிய ‛தி வாரியர்' படத்தில் நடித்தவர் ராம் பொதிதேனி. அந்த படத்தில் இடம் பெற்ற புல்லட் பாடல் சூப்பர் ஹிட். அதனால், தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு பழக்கமானவர். ஓரளவு தமிழ் பேச தெரிந்தவர். ஹீரோ ரஜினியை விட 40 வயது குறைந்தவர். ஆனாலும், பவர்புல் வில்லன் வேடத்தில் நடிப்பதாக கேள்வி.

தெலுங்கில் ஹீரோவாக நடித்தாலும், ரஜினிக்காக, இந்த கதைக்காக அவர் வில்லனாக மாறியிருக்கிறாரம். இதற்குமுன்பு முரட்டுகாளை படத்தில் பல படங்களில் ஹீரோவாக நடித்த ஜெய் சங்கர் ரஜினிக்கு வில்லன் ஆனார். சிவாஜி பட வில்லன் சுமன் கூட பல படங்களில் ஹீரோவாக நடித்தவர்.

2.0 படத்தில் வில்லனாக நடித்த அக் ஷய் குமார், காலா படத்தில் வில்லனாக நடித்த நானா படேகரும் ஹீரோக்கள். அதிலும் அக் ஷய் குமார் இப்போதும் ஹீரோவாக நடித்து வருகிறார்.

ஜெயிலர் படத்தில் அவர் மகனாக நடித்து கடைசியில் வில்லனாக மாறும் வசந்த் ரவியும் ஹீரோதான். தர்பார் படத்தில் வில்லனாக வரும் சுனில் ஷெட்டியும் ஹிந்தியில் ஹீரோவாக நடித்தவர்தான். கூலி படத்தில் வில்லனாக நடித்த நாகர்ஜூனா இன்னமும் தெலுங்கில் பிஸியான ஹீரோ. வேட்டை படத்தில் வில்லனாக நடித்த ராணாவும் பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !