சூர்யாவின் முதல் 2 மில்லியன் வசூல்
தமிழ் சினிமாவில் சுமார் 30 வருடங்களாக கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் சூர்யா. கடந்த வருடம் வரை அவரது படங்களின் அதிபட்ச வசூலாக 2013ல் வெளிவந்த 'சிங்கம் 2' படம் இருந்தது. அப்படம் 100 கோடி வசூலைக் கடந்து 120 கோடி வரை வசூலித்தது.
அந்த சாதனையை 13 வருடங்களுக்குப் பிறகு , இந்த ஆண்டு மே மாதம் வெளிவந்த 'கருப்பு' படம் முறியடித்தது. சூர்யாவின் முதல் 200 கோடி, முதல் 300 கோடி என வசூலித்து புதிய சாதனையை படைத்தது.
சூர்யா நடித்து கடந்த வாரம் வெளியான 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படம் தற்போது 150 கோடி வசூலைக் கடந்து ஓடி வருகிறது.
இப்படத்திற்கு அமெரிக்காவிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அங்கு 2 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலை இப்படம் கடந்துள்ளதாக வினியோக நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அமெரிக்காவில் சூர்யாவின் முதல் 2 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்த முதல் படமாக இது சாதனை புரிந்துள்ளது.