உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டிக்கெட் உயர்வு : தெலங்கானா அரசுக்கு பிலிம் சேம்பர் வேண்டுகோள்

டிக்கெட் உயர்வு : தெலங்கானா அரசுக்கு பிலிம் சேம்பர் வேண்டுகோள்

தெலங்கானா மாநிலத்தில் சினிமா டிக்கெட் கட்டணங்களை மாற்றியமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதிக பட்சமாக 300 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் தெலங்கானா பிலிம் சேம்பர் இந்த கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்யுமாறு வேண்டுகோள் வைத்துள்ளது. இந்த புதிய கட்டணங்களால் சிறிய நகரங்களில் செயல்படும் சிங்கிள் தியேட்டர்களில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

தெலுங்குத் திரையுலகத்தில் உள்ள முக்கியஸ்தர்களை கலந்து ஆலோசித்து புதிய கட்டண அறிவிப்பை மாற்றியமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் புதிய படங்கள் வெளியாகும் போது ஒரு வார காலத்திற்கு டிக்கெட் கட்டண உயர்வு வழங்கப்படும். அதற்கு வரவேற்பைத் தரும் தயாரிப்பாளர்கள் தற்போது இந்த நிரந்தர கட்டண உயர்வுக்கு வரவேற்பு தருவார்களா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !