உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கனவிலும் நினைக்கவில்லை : கவின் நெகிழ்ச்சி

கனவிலும் நினைக்கவில்லை : கவின் நெகிழ்ச்சி

விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின், நயன்தாரா நடித்துள்ள ‛ஹாய்' படம் ஆக., 28ல் வெளியாகிறது. கே.பாக்யராஜ், ராதிகா சரத்குமார், வி.டி.வி.கணேஷ், ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வித்தியாசமான காதல் கதையில் உருவாகி உள்ள இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

இப்பட விழாவில் பேசிய கவின், ‛‛இதே தியேட்டரில் என் நண்பர்கள் உடன் இணைந்து தனுஷ், நயன்தாரா நடித்த ‛யாரடி நீ மோகினி' படம் பார்த்தேன். அந்த கவின் இன்று நயன்தாரா உடன் நடிப்பார் என கனவிலும் நினைக்கவில்லை. இதை பார்க்கையில் நானும் கொஞ்சம் உழைத்திருக்கிறேன் என எண்ண தோன்றுகிறது'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !