ஹாய் பட டிரைலருக்கு வரவேற்பு
விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின், நயன்தாரா இணைந்து நடித்துள்ள படம் ஹாய். ரவுடி பிக்சர்ஸ், செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் ஜீன்ஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் இயக்குனர் கே.பாக்யராஜ், ராதிகா சரத்குமார், வி.டி.வி.கணேஷ், ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.
இந்த படம் ஆகஸ்ட் 14ம் தேதி சுதந்திர தினத்தன்று திரைக்கு வருவதாக இருந்தது. ஆனால் அன்றைய தினம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ், மகுடம் போன்ற படங்கள் வெளியானதால் இப்படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 28க்கு மாற்றி வைக்கப்பட்டது. இந்த படத்திற்காக ஜென்மார்ட்டின் இசையில் உருவான மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளன. அதில் கண்ணக் குழியா என்ற பாடலை ஜி.வி. பிரகாஷ்குமார் பாடியுள்ளார்.
இந்நிலையில் ஹாய் படத்தின் டிரைலருக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. வெளியான 24 மணிநேரத்தில் 20 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் கிடைத்துள்ளன. ஒரு வித்தியாசமான காதல் கதையில் இப்படம் உருவாகி இருப்பது டிரைலரை பார்க்கையில் புரிகிறது. மேலும், யுஏ சான்றிதழ் பெற்றுள்ள இப்படத்தின் டிஜிட்டல், ஓடிடி ரைட்ஸை ஜி 5 நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.