உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டூப் நடிகர் இல்லாமல் நடிக்கும் சல்மான்கான்

டூப் நடிகர் இல்லாமல் நடிக்கும் சல்மான்கான்

ஹிந்தியில் சல்மான் கான் நடிப்பில் கடைசியாக சிக்கந்தர் படம் வெளியான நிலையில் அதையடுத்து அவர் நடித்த மாத்ருபூமி படம் திரைக்கு வர தாமதமாகி வருகிறது. தற்போது வம்சி பைடிபள்ளி இயக்கும் ஆக்ஷன் படத்தில் அவர் நடித்து வருகிறார். தில் ராஜு தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தயாரிக்கும் இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார்.

இந்நிலையில், இந்த படத்திற்கு மான்ஸ்டர் என தலைப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இருப்பினும், தலைப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. மேலும், சல்மான் கானின் டூப் நடிகருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், இப்படத்தில் தனது சம்பந்தப்பட்ட ஆக் ஷன் காட்சிகளுக்கு டூப் பயன்படுத்தாமல் தானே நேரடியாக நடித்து வருகிறாராம். கால்சீட் பிரச்னை ஏற்படக்கூடாது என்பதற்காகவே சல்மான் கான் இந்த முடிவை எடுத்துள்ளார் என கூறப்படுகிறது. இந்த படம் 2027 ஈத் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !