உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கல்யாண விருந்து…. 80ஸ் ராஜா இசை எனக் கொண்டாடும் ரசிகர்கள்

கல்யாண விருந்து…. 80ஸ் ராஜா இசை எனக் கொண்டாடும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் கடந்த 50 ஆண்டுகளாக தனது இசையால் ரசிகர்களைக் கட்டிப் போட்டவர் இளையராஜா. இன்றைய தலைமுறை இயக்குனர்கள் கூட இளையராஜாவுடன் பணி புரிய வேண்டும் என்ற ஆவலில் இருக்கிறார்கள்.

மற்ற இசையமைப்பாளர்களைப் போல அல்லாமல், அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை அறிமுக இயக்குனர்கள், வளரும் இயக்குனர்கள் என எந்த பாகுபாடும் இல்லாமல் பணிபுரிபவர் இளையராஜா.

இன்றைய தலைமுறை இயக்குனர்களான கார்த்திக் சுப்பராஜ், மாரி செல்வராஜ் ஆகியோர் தற்போது இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் இளையராஜா இசையில் கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் மற்றும் பலர் நடிப்பில் செப்டம்பர் 25ல் வெளியாக உள்ள 'டோரத்தி' படத்தின் முதல் சிங்கிளான 'கல்யாண விருந்து' பாடல் இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியானது.

பாடலைக் கேட்ட ரசிகர்கள் 80ஸ் இளையராஜாவின் இசை போல இந்தப் பாடல் உள்ளது என கொண்டாடி வருகிறார்கள். இரைச்சல் இசைகளுக்கு மத்தியில் லைவ் இசைக் கருவிகளுடன் இளையராஜா தந்துள்ள இந்த குத்துப் பாடல் இனி கல்யாண வீடுகளில் அதிகம் ஒலிக்கும் ஒரு பாடலாக இருக்கும் என்பதுதான் பலரது கருத்தாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !