தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இன்றும் இருப்பவர் ரஜினிகாந்த். வசூல் நடிகராக இருந்து அரசியலுக்குச் சென்று இன்று முதல்வராக இருப்பவர் விஜய்.
ஒரு காலத்திலேயே 'யார் அடுத்த சூப்பர்ஸ்டார்' என்ற ஒரு விவாதம் வேண்டுமென்றே எழுந்த போது ரஜினி ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் இடையே மோதல் உருவானது.
கடந்த சில வருடங்களாக சமூக வலைத்தளங்களில் இரண்டு ரசிகர்களும் அதிகமாகவே சண்டையிட்டுக் கொண்டனர். விஜய் முதல்வராகப் பதவியேற்ற பின்பு சீனியர் நடிகரான கமல்ஹாசன் கூட போய் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். ஆனால், ரஜினிகாந்த் இதுவரை முதல்வர் விஜய்யை சந்திக்கவில்லை.
தேர்தலுக்கு முன்பாக ரஜினிகாந்த் பற்றி இன்று அமைச்சராக இருக்கும் ஆதவ் அர்ஜுனா விமர்சித்தது கடும் எதிர்ப்புகளை ஏற்படுத்தியது. பல அரசியல் கட்சித் தலைவர்கள் இது குறித்து தங்களது கண்டனங்களைத் தெரிவித்தனர்.
இந்நிலையில் ரஜினிகாந்தை சென்னை விமான நிலையத்தில் சில நிருபர்கள் கேள்வி கேட்டனர். அப்போது சினிமா பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்த ரஜினிகாந்த், விஜய் ஆட்சியின் 100 நாள் பற்றி ஒரு நிருபர் கேட்டதற்கு, அதைக் கேட்டது போல கூடக் காட்டிக் கொள்ளாமல் காரில் ஏறி சென்றுவிட்டார்.