உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தர்மன் படத்தில் நடிக்கிறாரா ஸ்ரேயா? - உண்மை தகவல்

தர்மன் படத்தில் நடிக்கிறாரா ஸ்ரேயா? - உண்மை தகவல்

நடிகர் ரஜினிகாந்த்துடன் இருக்கும் போட்டோவை சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாவில் வெளியிட்டு இருந்தார் ஸ்ரேயா. அது வைரல் ஆனது. அதேபோல் நடிகர் கயாடு லோகரும் ரஜினியுடன் இருக்கும் போட்டோவை பதிவிட்டு இருந்தார். இருவரும் தர்மன் படத்தில் நடிக்கிறார்கள். ஒரு பாடலுக்கு ஆடுகிறார்கள் என தகவல் கசிந்தது.

இது குறித்து விசாரித்தால், இரண்டுமே இல்லை. தர்மன் படத்துக்காக ஐதராபாத் போய் இருந்தார் ரஜினிகாந்த். வேறு பணிக்காக அங்கே சென்று இருந்த ஸ்ரேயா போட்டோ எடுத்து வெளியிட்டார். சிவாஜி வெற்றிக்கு பின் 19 ஆண்டுகளுக்குபின் அந்த ஜோடி போட்டோ வைரல் ஆனது.

ஐதராபாத்தில் இருந்து ரஜினி சென்னை திரும்பியபோது அதே விமானத்தில் கயாடு லோகர் பயணித்தார். அவர் போட்டோ எடுக்க அதுவும் பேசப்பட்டது. தர்மன் படத்தில் சிம்ரன் தான் ஜோடி. ஒரு பாடலுக்கு யார் ஆடப் போகிறார்கள். அப்படியொரு காட்சி இருக்குமா என இன்னமும் முடிவாகவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !