ஒருபோதும் மாற மாட்டேன் - பிரியா பவானி சங்கர்
செய்திவாசிப்பாளராக இருந்து சின்னத்திரையில் நுழைந்து இன்று தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பிரியா பவானி சங்கர். சிவா நிர்வானா இயக்கத்தில் ரவி தேஜா உடன் கடந்தவாரம் இவர் நடித்து வெளியான ‛இருமுடி' படம் ஹிட்டாகி உள்ளது. தெலுங்கில் இதற்கு முன் இவர் ஓரிரு படங்களில் நடித்திருந்தாலும் இந்த படம் தான் முதல் வெற்றி படமாக அமைந்துள்ளது. மற்ற நடிகைகள் போல் இவர் அதிக படங்களில் நடிப்பதில்லை.
இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛நான் நிறைய படங்கள் ஒப்புக் கொள்வது கிடையாது. தனித்துவமான கதைகளில் நடித்து ரசிகர்களை கவரவே விரும்புகிறேன். எனது ஒவ்வொரு படத்தை கவனமாக தேர்வு செய்கிறேன். சினிமா பயணத்திலும் எனது ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்கிறேன். குறிப்பாக எனது படங்களை அனைவரும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதே என் விருப்பம். இதிலிருந்து ஒருபோதும் நான் மாற மாட்டேன்'' என்கிறார்.