உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மூத்த தெலுங்கு நடிகர் ஜி.வி.நாராயண ராவ் மரணம்

மூத்த தெலுங்கு நடிகர் ஜி.வி.நாராயண ராவ் மரணம்

தெலுங்கு திரையுலகில் குணச்சித்திர நடிகராகவும் மற்றும் தயாரிப்பாளராகவும் ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்டவர் நடிகர் ஜி.வி.நாராயண ராவ். 73 வயதான இவர் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார். அவருக்கு திரையுலகினர் மற்றும் பலரும் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்த இவர் சென்னை திரைப்படக் கல்லூரியில் நடிப்பு பயிற்சி பெற்று திரைத்துறைக்கு வந்தவர். 1976-ல் இயக்குனர் கே.பாலசந்தர் தெலுங்கில் இயக்கிய 'அந்துலேனி கதா' படத்தின் மூலம் தான் இவர் ஒரு நடிகராக அறிமுகமானார். இந்த முதல் படத்திலேயே சிறந்த துணை நடிகருக்கான நந்தி விருதை பெற்றார்.

அதை தொடர்ந்து பாலச்சந்தரின் சில படங்களில் நடித்த இவர், 'நினைத்தாலே இனிக்கும்' படத்தில் கூட ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். திரைப்படக் கல்லூரியில் ரஜினிகாந்தின் பேட்ச் மேட் என்பதால் அவருடன் நட்பில் இருந்த இவர், 1988-ல் சிரஞ்சீவியை வைத்து தான் தயாரித்த 'யமுடிக்கு மொகுடு' என்கிற படத்தை தமிழில் அதிசய பிறவி என்கிற பெயரில் ரஜினிகாந்தை நடிக்கச்சொல்லி தூண்டியவர் இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !