உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சன்னி லியோன் மீதான பண மோசடி வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

சன்னி லியோன் மீதான பண மோசடி வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் பல மொழிகளிலும் ஒரு பாடலுக்கு ஆடியும், சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில், தெலுங்கில் சன்னி லியோன் நடித்த படம் ஒன்றிற்கு அவருக்கு வாய்ப்பு பெற்று தந்த ஏஜென்சி ஒன்று, படம் முடிந்த பிறகு தங்களுக்கு தர வேண்டிய சம்பள பாக்கியையும் மற்றும் உரிய கமிஷனையும் தராமல் ஏமாற்றிவிட்டார் என்று மும்பை உயர்நீதிமன்றத்தில் அவர் மீது மோசடி வழக்கு தொடர்ந்தனர்.

இந்த நிலையில், தற்போது அந்த மனுவை விசாரித்த நீதிபதி, இது முழுக்க முழுக்க ஒரு வணிக ஒப்பந்தம் சம்பந்தப்பட்ட தகராறு தான்; இதில் எந்த ஒரு கிரிமினல் குற்றமும் இல்லை. மேலும் இது ஒப்பந்த முறிவு தொடர்பான விஷயம் மட்டுமே; குற்றவியல் நம்பிக்கை மோசடிக்கான தகுந்த ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கூறி சன்னி லியோன் மற்றும் அவரது கணவருக்கு எதிராக தொடுக்கப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !