உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டாக்சிக் முதல்நாளில் ரூ.150 கோடி வசூல்

டாக்சிக் முதல்நாளில் ரூ.150 கோடி வசூல்

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடிப்பில் நேற்று திரைக்கு வந்துள்ள படம் ‛டாக்சிக்'. இந்தாண்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம். 'ஏ' சான்றிதழ் பெற்ற படம் இது என்றாலும் படத்தில் ஒரே வன்முறை, ரத்தம், ஆபாசம் என கொட்டி கிடப்பதால் நெகட்டிவ் விமர்சனங்களே வருகின்றன. இருப்பினும் முதல்நாளில் உலகளவில் இப்படம் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் இப்படம் லாபத்தை பெறுவது கஷ்டம் என்றே சொல்கிறார்கள். யஷ் நடித்து இதற்கு முன் வெளியான கேஜிஎப் படங்களின் வசூலை இப்படம் முறியடிக்காது என்பதுதான் பெரும்பாலான ரசிகர்களின் கருத்தாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !