'சந்திரோல்சவம்' : மீண்டும் ஒரு மோகன்லால் படம் ரீ ரிலீஸுக்கு தயார்
ஒரு பக்கம் மோகன்லால் நேரடியாக நடிக்கும் படங்கள் சீரான இடைவெளியில் வெளியானாலும் கூட, அவர் 20, 30 வருடங்களுக்கு முன்பு நடித்து ஹிட்டான படங்கள் அவ்வப்போது கிடைக்கும் இடைவெளியில் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. இந்த வகையில் கடந்த 2005-ல் மோகன்லால் நடிப்பில் வெளியான 'சந்திரோல்சவம்' என்கிற படம் 4K முறையில் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது.
இந்த காலத்தால் அழியாத காதல் கதையை திரையரங்குகளில் மீண்டும் அனுபவிக்க ரசிகர்கள் தயாராகலாம் என்று மோகன்லாலே இந்த செய்தியை பகிர்ந்து கொண்டு தனது ரசிகர்களை சோசியல் மீடியா மூலம் உற்சாகப்படுத்தியுள்ளார். ரஞ்சித் இயக்கத்தில் உருவான இப்படத்தில் மீனா, குஷ்பு, கொச்சின் ஹனீபா உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்திருந்தனர். இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். இன்றளவும் இதன் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.