அம்மாவிடம் திரும்பப் போவதில்லை : பார்வதி திட்டவட்டம்
மலையாள நடிகை பார்வதி கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகை ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக மலையாள நடிகர் சங்கமான அம்மா மீது அதிருப்தி ஏற்பட்டு அதிலிருந்து விலகினார். அதன்பிறகு பார்வதி, ரம்யா நம்பீசன், ரேவதி உள்ளிட்ட பலர் இணைந்து சினிமா பெண்கள் நல அமைப்பை உருவாக்கினார்கள்.
கடந்த வருடம் நடிகை ஸ்வேதா மேனன் நடிகர் சங்கத்திற்கு புதிய தலைவராக பொறுப்பேற்ற பின்பு சங்கத்திலிருந்து விலகியவர்கள் மீண்டும் திரும்ப வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் ஒருபோதும் நடிகர் சங்கத்திற்கு திரும்பப் போவதில்லை என்றும், மேலும் தற்போது ஒரு அமைப்பில் தான் அங்கம் வகிப்பதால் இன்னொரு அமைப்புக்கு செல்ல வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்றும் கூறியுள்ளார் பார்வதி.
இது குறித்து அவர் கூறும்போது, “ஒரு சங்கத்திடம் இருந்து எத்தகைய பாதுகாப்பு, சமமான மரியாதை எதிர்பார்க்கப்படுகிறதோ அதை அந்த அமைப்பு எனக்கு வழங்கவில்லை. எல்லோருக்கும் வழங்கக்கூடிய இடமாகவும் அது எனக்கு தோன்றவில்லை. எந்த ஒரு அமைப்பும் இல்லாமலேயே நான் பாதுகாப்பாக உணர்கிறேன். அம்மா அமைப்பை மக்கள் இப்போது முன்னை போல தீவிரமாக எடுத்துக் கொள்வது இல்லை” என்று கூறியுள்ளார்.