உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இத்தனை கோடி நஷ்டத்தைத் தாங்குமா தயாரிப்பு நிறுவனம் ?

இத்தனை கோடி நஷ்டத்தைத் தாங்குமா தயாரிப்பு நிறுவனம் ?

இந்தியத் திரையுலகத்தில் இதற்கு முன்பு வேறு எந்த ஒரு தயாரிப்பு நிறுவனத்திற்கும் இப்படி ஒரு தோல்வி கிடைத்திருக்காது என்று திரையுலகினரே அனுதாபப்பட ஆரம்பித்துள்ளனர். கர்நாடகாவைச் சேர்ந்த பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இந்த ஆண்டில் 'கேடி தி டெவில்' என்ற கன்னடப் படம், அடுத்து 'ஜனநாயகன்' தமிழ்ப் படம், கடந்த வாரம் வெளியான 'டாக்சிக்' ஆகிய படங்கள் வெளிவந்தன.

இவற்றில், 'கேடி தி டெவில்' படத்தின் பட்ஜெட் சுமார் 100 கோடியும், 'ஜனநாயகன்' படத்தின் பட்ஜெட் சுமார் 400 கோடியும், 'டாக்சிக்' படத்தின் பட்ஜெட் சுமார் 600 கோடியும் என மொத்தம் 1100 கோடி என்கிறது திரையுலக வட்டாரங்கள்.

இவற்றில் 'கேடி தி டெவில்' படம் படுதோல்வி அடைந்தது. மொத்தமாகவே 25 கோடிதான் வசூலித்தது என்கிறார்கள். தமிழக முதல்வர் விஜய்யின் கடைசி படமாக வெளிவந்த 'ஜனநயாகன்' படத்திற்கான அதிகாரப்பூர்வ வசூல் அறிவிக்கப்படவில்லை. ஆனாலும், 300 கோடி வசூலைக் கடந்திருக்கலாம் என்பது தகவல். 'டாக்சிக்' படத்தின் வசூல் 200 கோடியைக் கடந்திருக்கும்.

இந்தப் படங்களின் மூலமாக தயாரிப்பு நிறுவனத்திற்குக் குறைந்தது 500 கோடி நஷ்டம் வர வாய்ப்புள்ளதாக கிசுகிசுக்கிறார்கள். அவ்வளவு நஷ்டத்தைத் தயாரிப்பு நிறுவனம் எப்படி தாங்கும் என்பதுதான் திரையுலகினரின் அனுதாபத்திற்குக் காரணமாக அமைந்துள்ளது.

குறிப்பு - பட்ஜெட், வசூல் விவரங்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வமானதல்ல. திரையுலகத்தில் வெளியான தகவல்களின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !