நான் உயிரோடு இருக்கிறேன் : வதந்திக்கு செப் தாமு முற்றுப்புள்ளி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நட்சத்திர நிகழ்ச்சி 'குக் வித் கோமாளி'. இந்த நிகழ்ச்சியின் தொடக்க காலம் முதல் பங்கேற்றவர் பிரபல சமையல் கலைஞர் தாமு. பல முன்னணி சமையல்கலை கல்லூரியல் முதல்வராக பணியாற்றியவர் இவர். தற்போது ஒளிபரப்பாகி முடிந்துள்ள 'குக் வித் கோமாளி' 7வது சீசனில் சில வாரங்களாக தாமு பங்கேற்கவில்லை.
இதனால் அவர் உடல்நலம் உள்ளிட்ட பல வதந்திகள் திடீரென பரவியது. இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டிருக்கும் அவர், 'குக் வித் கோமாளி' செப் தாமு அதிர்ச்சி மரணமடைந்திருக்கிறார் என்று வதந்தி ஒன்று பரவி இருக்கிறது. கடவுள் புண்ணியத்தில் நான் நன்றாகத்தான் இருக்கிறேன். வதந்திகளை நம்ப வேண்டாம்.
பிடிக்காதவர்கள் எதையாவது சொல்லிக் கொண்டு இருப்பார்கள். அதனால் அதையெல்லாம் நம்பாதீர்கள். காலில் ஊசி செலுத்தியதால் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை. உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பேன். அதனால் தேவையில்லாத வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். சீக்கிரமே நான் திரும்பி வருவேன். நான் உயிரோடுதான் இருக்கிறேன் என்று அந்த வீடியோவில் பேசி இருக்கிறார்.