உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாறு படத்தில் ராஷ்மிகா

எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாறு படத்தில் ராஷ்மிகா


பழம்பெரும் கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு படத்தை தெலுங்கில் 'ஜெர்ஸி, கிங்டம்' படத்தை இயக்கிய கவுதம் தின்னனூரி என்பவர் இயக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் அல்லு அரவிந்த், பன்னிவாசு, ராக்லைன் வெங்கடேஷ் இணைந்து தயாரிக்கின்றனர். அப்படத்தில் சாய் பல்லவியை நடிக்க வைக்கப்போவதாக முன்பு ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

சில மாதங்களுக்கு முன்னதாக சாய் பல்லவிக்கு பதிலாக 'ஏஸ், மதராஸி' படத்தில் நடித்த ருக்மணி வசந்த் நடிக்க இருப்பதாக செய்தி வெளியானது. இந்த நிலையில் இறுதியாக நடிகை ராஷ்மிகா மந்தனா இப்படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அறிவிப்பு எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பிறந்தநாளான செப்டம்பர் 16ம் தேதி வெளியாகவுள்ளதாக தெலுங்கு திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !