7 மில்லியன் லைக்குகளைப் பெற்ற தீபிகா படுகோனே 'பிரக்னன்சி போட்டோஸ்'
பிறந்தநாள், திருமண நிச்சய நாள், மண நாள், வளைகாப்பு நாள், பெயர் சூட்டும் நாள் என நமது வாழ்க்கையின் முக்கிய நாட்களை புகைப்படங்களாகப் பதிவு செய்து வைத்துக் கொள்வது வழக்கமானவை. அவற்றில் தற்போது பெண்களின் 'கர்ப்ப காலத்தை' புகைப்படங்களாகப் பதிவு செய்து வைத்துக் கொள்வதும் வழக்கமாகி உள்ளது.
யார் எப்போது இதை ஆரம்பித்து வைத்தார்களோ தெரியவில்லை, கடந்த சில வருடங்களாக சினிமா பிரபலங்கள் மத்தியிலும், ஏன் சாதாரண மக்கள் மத்தியிலும் இந்த வழக்கம் இடம் பெற ஆரம்பித்துவிட்டது. சிலர் அவற்றை தனிப்பட்ட புகைப்படங்களாக தங்களுக்குள் வைத்துக் கொள்கிறார்கள். சிலர் அவற்றை சமூக வலைதளங்களில் வெளியிடவும் செய்கிறார்கள்.
பாலிவுட்டின் பிரபல நட்சத்திர ஜோடியான ரன்வீர் சிங், தீபிகா படுகோனே அவர்களது இரண்டாவது குழந்தையை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். குடும்பத்துடன் 'பிரக்னன்சி போட்டோஸ்' புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்கள். இன்ஸ்டாகிராம் தளத்தில் மட்டும் 7.5 மில்லியன் லைக்குகளை அந்தப் பதிவு பெற்றுள்ளது.