உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சினிமாவில் நடிப்பதற்காக நிஜ புலியுடன் பயிற்சி எடுக்கும் நடிகர்

சினிமாவில் நடிப்பதற்காக நிஜ புலியுடன் பயிற்சி எடுக்கும் நடிகர்

கன்னடத் திரை உலகில் குறிப்பிடத்தக்க நடிகராக வலம் வருபவர் கிரண் ராஜ். இவர் 'ரான்னி, தி ரூலர்' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். சமீபத்தில் ஒரு சிங்கத்துடன் நெருக்கமாகப் பழகும் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில் சிங்கம் ஒன்று அவரை நோக்கி ஓடிவந்து அவர் மேல் தாவுவவது போலக் காட்சி இருந்தது. இதனால் அவரை சிங்கம் தாக்கிவிட்டதாக நினைத்து அவரது ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்கள் அச்சத்தைப் போக்கும் விதமாக விளக்கம் அளித்துள்ள நடிகர் கிரண் ராஜ், இன்னொரு வீடியோ மூலம், அந்த வீடியோவில் இருக்கும் சிங்கம் என்னை தாக்கியது என்பது உண்மையான செய்தி அல்ல. இந்த சிங்கத்துடன் குட்டியிலிருந்து நான் பழகி வருகிறேன். பிறந்தநாள் முதல் அது என் மீது மிகுந்த பாசம் கொண்டுள்ளது. அதுமட்டுமல்ல, என்னுடைய வரவிருக்கும் புதிய படத்தில் இடம்பெறும் காட்சிகளுக்காக தான் இப்படிப் பயிற்சியில் ஈடுபட்டேன். அதனால் அது ஆபத்தான தாக்குதல் அல்ல; அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முறையாகப் பின்பற்றப்படுகின்றன என்று கூறியுள்ளார்..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !