உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தம்பி பட புரமோஷனில் கலந்து கொண்டு நடனமாடி அசத்திய விஜய் தேவரகொண்டா

தம்பி பட புரமோஷனில் கலந்து கொண்டு நடனமாடி அசத்திய விஜய் தேவரகொண்டா

தெலுங்குத் திரை உலகின் இளம் நடிகரான விஜய் தேவரகொண்டாவின் தம்பியான ஆனந்த் தேவரகொண்டாவும் நடிகராகச் சில படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் நடித்துள்ள 'எபிக் : பர்ஸ்ட் செமஸ்டர்' திரைப்படம் இந்த வாரம் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற இதன் புரமோஷன் நிகழ்ச்சியில் தனது மைத்துனர் ஆனந்த் தேவரகொண்டாவுக்காக கலந்து கொண்டு படக்குழுவை வாழ்த்தினார் ராஷ்மிகா மந்தனா.

இந்த நிலையில் இன்னொரு புரமோஷன் நிகழ்ச்சியில் தம்பிக்காக அண்ணன் விஜய் தேவரகொண்டா நேரில் கலந்து கொண்டார். அதுமட்டுமல்ல, மேடையில் இந்தப் படத்தின் ஹிட் பாடல்கள் சிலவற்றை ஒலிக்கவிட்டு, தனது தம்பி மற்றும் நாயகி வைஷ்ணவி சைதன்யா ஆகியோருடன் இணைந்து நடனமும் ஆடினார்.. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !