உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / உதவி இயக்குனராக இருந்தவர் ‛ஹனுமான் அன்ஷ்' படத்தின் ஹீரோவாக மாறியது எப்படி?

உதவி இயக்குனராக இருந்தவர் ‛ஹனுமான் அன்ஷ்' படத்தின் ஹீரோவாக மாறியது எப்படி?

சமீபத்தில் ஹிந்தியில் வெளியான ஹனுமான் அன்ஷ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று நூறு கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. விஷால் சதுர்வேதி இயக்கத்தில் உருவான இந்த படம் நீம் கரோலி பாபாவின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி உள்ளது. இந்த படத்தில் அந்த கதாபாத்திரத்தில் நடித்தவர் ஷோபினா சத்யா என்பவர். ஆனால் இந்த கதாபாத்திரத்திற்காக முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் வேறு ஒருவர். கடைசி நேரத்தில் அந்தப்படத்தின் உதவி இயக்குனரான ஷோபினா சத்தியா எப்படி நடிகராக மாறினார் தெரியுமா ?

இந்த கதாபாத்திரத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நடிகருக்கு படப்பிடிப்பின் முதல் நாளில் கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டு அதன் காரணமாக மயக்கம் அடைந்தார். இதனால் முதல் நாளே படப்பிடிப்பை தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டது. அதேசமயம் படப்பிடிப்பை தள்ளிவைக்க விரும்பாமல் அதே தேதியில் படத்தை ஆரம்பிக்க இயக்குனரும் தயாரிப்பாளர்களும் விரும்பினார்கள். அந்த சமயத்தில் உதவி இயக்குனர்களில் ஒருவராக பணியாற்றிய ஷோபினா சத்யாவின் உருவம் நீம் கரோலி பாபாவை தோற்றத்தில் ஒத்திருப்பதை கவனித்த இயக்குனர் விஷால் சதுர்வேதி பிறகு அவரிடம் இருந்த தயக்கத்தையும் பயத்தையும் போக்கி அந்த கதாபாத்திரத்தில் அவரை நடிக்க வைத்தாராம். ஒரு உதவி இயக்குனர் இன்று நூறு கோடி வசூல் படத்தின் ஹீரோவாக மாறியது இப்படித்தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !