செப்டம்பர் 18-ல் தெலுங்கில் வெளியாகும் ஹனுமான் அன்ஷ்
ADDED : 10 hours ago
புகழ்பெற்ற ஆன்மிக குருவான நிம் கரோலி பாபாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ஹிந்தியில் தயாரான படம் ஹனுமான் அன்ஷ். கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி வெளியான இப்படம், 2 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு 200 கோடி வசூல் செய்து, மிகப்பெரிய பிளாக்பாஸ்டர் படமாக உருவெடுத்துள்ளது. விஷால் சதுர்வேதி இப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்த நபடம் வரும் செப்டம்பர் 18 அன்று தெலுங்கில் வெளியாகவுள்ளது. திரி விக்ரம் இதன் டப்பிங் பதிப்பை வெளியிடுகிறார். ஷோபினவ் சத்யா மற்றும் சந்தன் ஆனந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், உதய்சிங் ராஜ்புத் மற்றும் பூர்ணிமா திவாரி ஆகியோரும் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹனுமான் அன்ஷ் படத்துக்கு சது சுசில் திவாரி இசையமைத்துள்ளார்.