உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ராஷ்மிகா நடிக்கும் எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாறு படம்: நாளை துவக்கி வைக்கும் கமல்

ராஷ்மிகா நடிக்கும் எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாறு படம்: நாளை துவக்கி வைக்கும் கமல்


பாரத ரத்னா, பிரபல கர்நாடக சங்கீத பாடகி எம் எஸ் சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். நாளை சென்னையில் நடக்கும் விழாவில் கமல்ஹாசன் படத்தை அறிமுகப்படுத்துகிறார். 'ஜெர்சி, கிங்டம், மேஜிக்' படங்களை இயக்கிய கவுதம் தின்னூரி இயக்க அல்லு அரவிந்த் தயாரிக்கிறார். எம் எஸ் சுப்புலட்சுமியின் 110வது பிறந்தநாளை முன்னிட்டு நாளை இந்த விழா பிரமாண்டமாக நடக்கிறது.

எம் எஸ் சுப்புலட்சுமி தோற்றத்திற்கான மேக்கப் டெஸ்ட் மற்றும் நடிப்பு பயிற்சி ராஷ்மிகாவுக்கு நடந்துள்ளது. பாடகி எம் எஸ் சுப்புலட்சுமி ஆரம்ப காலத்தில் 'மீரா' உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார். அவரின் வாழ்க்கை வரலாறு படத்தில் எந்த பாகத்தை இந்த படத்தில் சொல்ல வருகிறார்கள் என்பது சஸ்பென்ஸ் ஆக இருக்கிறது. அதேபோல் அனிருத் இசையமைக்கிறார் என்பதும் பல்வேறு கர்நாடக சங்கீத ஆர்வலர்களுக்கு ஒரு ஆச்சரியமாகவும், அதிர்ச்சி தகவலாகவும் இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !