உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / குடும்பத்தினர், நண்பர்கள் பங்கேற்ற சமந்தா வளைகாப்பு

குடும்பத்தினர், நண்பர்கள் பங்கேற்ற சமந்தா வளைகாப்பு

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்து வரும் நடிகை சமந்தா, இயக்குனர் ராஜ் நிடிமொரு ஆகியோர் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இருவரும் இணைந்து வெப் சீரிஸ்களில் பணியாற்றிய போது காதல் மலர்ந்ததாக சொல்லப்பட்டது. இருவருமே அவரவர் முதல் திருமண பந்தத்திலிருந்து விலகியவர்கள்.

சமந்தா நடித்து சமீபத்தில் வெளிவந்த, 'மா இன்ட்டி பங்காரம்' படம் வெற்றிகரமாக ஓடியது. அதன் நிகழ்ச்சி ஒன்றின் போது தான் தாய்மை அடைந்திருப்பதாகச் சொன்னார் சமந்தா. அதனால், புதிய படங்கள் எதையும் நடிக்க அவர் சம்மதிக்கவில்லை.

சமந்தாவிற்கு தற்போது கோவை, ஈஷாவில் வளைகாப்பு நடைபெற்றுள்ளது. இது குறித்து அவரது இன்ஸ்டாவில், “நமது மரபுகள் மீது எனக்கு எப்போதும் ஆழ்ந்த மரியாதை உண்டு. ஒவ்வொரு சடங்கிற்குப் பின்னாலும் உள்ள பொருளை நான் முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் இருக்கலாம். ஆனால், மந்திரத்தின் ஒலி, அதை உச்சரிப்பதன் மூலம் உருவாகும் ஆற்றல் மற்றும் பழங்கால நடைமுறைகள், தலைமுறைகளாகக் கவனத்துடன் கடத்தப்பட்டு வந்த விதம் ஆகியவற்றில் ஏதோ ஒரு ஆழமான அம்சம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை நான் எப்போதும் நம்புகிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

சமந்தா கிறிஸ்துவராக இருந்தாலும் இந்து மதக் கோவில்களுக்கு செல்லும் வழக்கமுடையவர். சில வருடங்களுக்கு முன்பு வட இந்தியாவில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட இடங்களுக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டார்.

தனது வளைகாப்பு நிகழ்ச்சியின் புகைப்படங்களை சமந்தா பகிர்ந்துள்ளதற்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !