வாசகர்கள் கருத்துகள் (1)
இது சன்டீவி தன் கட்சி ஜால்ராக்களுக்கு தரும் விருது. இன்னும் இது பல பேர்களும் தெரிவதில்லை
தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கு 'தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள்' , சுருக்கமாக 'சைமா' விருதுகள் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக வழங்கப்பட்டு வருகின்றன.
2025ம் வருடத்தில் வெளியான படங்களுக்கான 14வது சைமா விருதுகள் செப்டம்பர் 12 மற்றும் 13ம் தேதிகளில் பெங்களூருவில் நடைபெற்றது. 12ம் தேதி தமிழ், மலையாளப் படங்களுக்காகவும், 13ம் தேதி தெலுங்கு, கன்னடப் படங்களுக்காகவும் விருதுகள் வழங்கப்பட்டன. 'டூரிஸ்ட் பேமிலி' படம் அதிகபட்சமாக 6 விருதுகளை வென்றுள்ளது.
தமிழ்ப் படங்களுக்கான விருதுகள் விவரம்…
சிறந்த படம் - டிராகன்
சிறந்த இயக்குனர் - அஷ்வத் மாரிமுத்து (டிராகன்)
சிறந்த ஒளிப்பதிவாளர் - ரவி கே சந்திரன் (தக் லைப்)
சிறந்த நடிகர் - துருவ் விக்ரம் (பைசன் காளமாடன்)
சிறந்த துணை நடிகர் - சமுத்திரக்கனி (காந்தா)
சிறந்த துணை நடிகை - ஸ்வாசிகா (மாமன்)
சிறந்த நடிகர் எதிர்மறை கதாபாத்திரம் - அர்ஜுன் தாஸ் (குட் பேட் அக்லி)
சிறந்த அறிமுக நடிகர் - எல்கே அக்ஷ்ய் குமார் (சிறை)
சிறந்த அறிமுக இயக்குனர் - அபிஷன் ஜீவிந்த் (டூரிஸ்ட் பேமிலி)
சிறந்த அறிமுக தயாரிப்பாளர் - குடும்பஸ்தன்
சிறந்த இசையமைப்பாளர் - சாய் அபயங்கர் (டியூட்)
சிறந்த பாடலாசிரியர் - சாரதி (சிறை - நீலோத்தி….பாடல்)
சிறந்த பின்னணிப் பாடகர் - விஜய் யேசுதாஸ் (டூரிஸ்ட் பேமிலி - இறகே... பாடல்)
சிறந்த பின்னணிப் பாடகி - சுபலாஷினி (கூலி - மோனிகா… பாடல்)
சிறந்த நடிகர் - மக்கள் விருப்பம் - பிரதீப் ரங்கநாதன் (டிராகன்)
சிறந்த படம் - விமர்சகர் விருப்பம் - டூரிஸ்ட் பேமிலி
சிறந்த நடிகை - பிரபலம் - சிம்ரன் (டூரிஸ்ட் பேமிலி)
சிறந்த நடிகை - விமர்சகர் விருப்பம் - பாக்யஸ்ரீ போர்ஸே (காந்தா)
நடிகை பாரதி விஷ்ணுவர்தன், நடிகை லட்சுமி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
சில விருதுகளின் விவரம் இன்னும் வெளியாகவில்லை. 'டூரிஸ்ட் பேமிலி' படக்குழுவினர் மொத்தமாக, அதிகபட்சமாக 6 விருதுகளை வென்றதாக தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
இது சன்டீவி தன் கட்சி ஜால்ராக்களுக்கு தரும் விருது. இன்னும் இது பல பேர்களும் தெரிவதில்லை