65 வசூலைக் கடந்த 'மண்டாடி' - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ADDED : 16 hours ago
மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், சூரி, மகிமா நம்பியார், சுஹாஸ், சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் செப்டம்பர் 10ம் தேதி வெளியான படம் 'மண்டாடி'.
தமிழ், தெலுங்கில் வெளியான இப்படம் உலக அளவில் 65 கோடி வசூலைக் கடந்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் அவரது எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளார்.
சூரி கதையின் நாயகனாக நடித்து கடந்த சில வருடங்களில் வெளியான சில படங்களின் வசூலை விடவும் இந்தப் படம் புதிய சாதனையைப் படைத்துள்ளது.
100 கோடி வசூலைத் தொடுமா அல்லது இன்னும் அதிகமான வசூலைப் பெறுமா என்பது இதற்கு மேலும் ஓடுவதைப் பொறுத்து அமையும். இப்படத்தின் வெற்றி, வசூல் சூரியின் மார்க்கெட்டை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.