ரீ ரிலீஸ் ஆகிறது திரிஷா இல்லன்னா நயன்தாரா
ADDED : 10 hours ago
ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஆனந்த், மனிஷா யாதவ் நடிப்பில் வெளியான படம் திரிஷா இல்லன்னா நயன்தாரா. ஆர்யா, சிம்ரன் கவுரவ வேடத்தில் வந்தனர். இது, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய முதல் படமும் கூட. அடல்ட் கன்டன்ட் கலந்த காமெடி படமாக வந்து வரவேற்பை பெற்றது. இந்நிலையில் 11 ஆண்டுகளுக்குபின் இந்த படம் அக்டோபர் 24ம் தேதி ரீ ரிலீஸ் ஆக உள்ளது.
இந்த படம் ரீ ரிலீஸ் குறித்து ஆதிக், ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி ஆகியோர் பேசுவார்களா என தெரியவில்லை. காரணம் இந்த படம் வெளியாகும்போது அவர்கள் இமேஜ் வேறு. இப்போது வேறு நிலை. அஜித், விஷால் படங்கள் இயக்கி ஆதிக் வேறு இடத்துக்கு போய்விட்டார். ஜி.வி.பிரகாஷ் 3 தேசிய விருதுகளுடன் அடுத்த இடத்துக்கு போய்விட்டார். ஆனந்தி திருமணம் ஆகி செட்டில் ஆகிவிட்டார்.