உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அருள்நிதி படத்திற்கு தடைகேட்டு தயாரிப்பாளர் வழக்கு

அருள்நிதி படத்திற்கு தடைகேட்டு தயாரிப்பாளர் வழக்கு

2015ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளிவந்த ஹாரர் திரில்லர் படமான 'டிமான்டி காலனி' படம் பெரிய வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமும் வெற்றி பெற்றது. தற்போது அதன் 3ம் பாகம் தயாராகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து மற்ற பணிகள் நடந்து வருகிறது. வருகிற அக்டோர் 1ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் படத்தின் இணை தயாரிப்பாளரான விஜயா சுப்ரமணியம் என்பவர் படத்தின் வெளியீட்டுக்கு தடைகோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் தயாரிப்பு மற்றும் விநியோக ஒப்பந்தத்தை மீறி 'டிமான்டி காலனி 3' படத்தை தங்களுக்கு தெரியாமல் வெளியிட முயன்றதாகவும், வேறொரு நிறுவனம் மூலம் படத்தை தயாரித்து ஓடிடிக்கு விற்றதாகவும், கூறியுள்ளனர். மேலும் பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் 'டிமான்டி காலனி 3' படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், இயக்குநர் அஜய் ஞானமுத்து மற்றும் படக்குழு இது தொடர்பாக 4 வாரத்தில் உரிய பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் திட்டமிட்டபடி படம் வருகிற 1ம் தேதி வெளிவராது என்று தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !