உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இளையராஜாவை பேட்டி எடுத்த கார்த்திக் சுப்பராஜ் : வைரலாகும் மலரும் நினைவுகள்

இளையராஜாவை பேட்டி எடுத்த கார்த்திக் சுப்பராஜ் : வைரலாகும் மலரும் நினைவுகள்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய டோரதி படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இடம் பெற்ற கல்யாண விருந்து, முத்துமணி பாடல்கள் ஹிட்டாகி உள்ளன. இந்த படத்தின் பின்னணி இசையை சமீபத்தில் விழா நடத்தி படக்குழுவினர் வெளியிட்டர். இந்தவாரம் செப்டம்பர் 25ம் தேதி படம் ரிலீஸாகிறது.

படத்தின் விளம்பரத்துக்காக இளையராஜாவை பேட்டி எடுத்துள்ளார் கார்த்திக் சுப்பராஜ். அதில் தனது இளமைகாலம், பாரதிராஜா, சிவாஜியுடன் பணியாற்றிய அனுபவம் உட்பட பல விஷயங்களை மனம் திறந்து பேசியிருக்கிறார் இளையராஜா. இந்த பேட்டி வைரலாகி உள்ளது. குறிப்பாக, சின்ன வயதில் தனது சட்டையை வாங்கி பாரதிராஜா போட்டு ஒரு நாடகத்தில் நடித்தது. அது தன் சட்டை என ஊரில் நிரூபிக்க போராடியது. அந்த நாடகத்தில் நடந்த சண்டை என பல விஷயங்களை இளையராஜா சுவாரஸ்யமாக பேசியிருக்கிறார்.

குறிப்பாக, அந்த நாடகத்தில் நடித்த பாரதிராஜா தனது சட்டையை போட்டு நடிக்க, ஊர்க்கார்களுக்கு அது தன் சட்டை என நிரூபிக்க, அதே நாடகத்தில் தான் வலிய போய், அதே சண்டைபோட்டுகிட்டு நடித்தேன். அதை பார்த்து பாரதிராஜா நீ ஏன்டா வந்தே என கடுகடுத்தார் என இளையராஜா பேசியுள்ளார்.

ஜெயகரன் என்ற தனது சின்ன வயது நண்பன், எம்.சுப்ரமணியன் என்ற மதுரை நண்பன், கோழிகூவுது நாடகம் என பல விஷயங்களை கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் அந்த பேட்டியில் பேசியுள்ளார். பல ஆண்டுகளுக்குபின் சிரித்து, ரசித்து அந்த பேட்டியில் பேசியுள்ளார் இளையராஜா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !