உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஒரு பக்கம் எம்.எஸ்.சுப்புலட்சுமி, இன்னொரு பக்கம் பழங்குடியின பெண் : அசத்தும் ராஷ்மிகா

ஒரு பக்கம் எம்.எஸ்.சுப்புலட்சுமி, இன்னொரு பக்கம் பழங்குடியின பெண் : அசத்தும் ராஷ்மிகா

பிரபல கர்நாடக சங்கீத பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாறு சினிமாவாகிறது. அதில் ராஷ்மிகா நடிக்கிறார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பை நடிகர் கமல்ஹாசன் துவங்கி வைத்தார். விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. எம்.எஸ்.வேடத்துக்கு அவர் பக்காவாக செட் ஆவாரா? அந்த படம் எப்படி வரப்போகிறதோ என்பது பலரின் கேள்வியாக உள்ளது.

இந்நிலையில், மைசா என்ற படத்தில் பழங்குடியின பெண்ணாக நடிக்கிறார் ராஷ்மிகா. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்திய ஆகிய 5 மொழிகளில் நவம்பர் 27ல் படம் ரிலீஸ் ஆகிறது. ரவீந்திர புல்லே இயக்கும் இதில் ராஷ்மிகா பக்கா ஆக் ஷன் ஹீரோயினாக நடிக்கிறார்.

இந்த பட டீசர் வெளியாகி உள்ளது. அதை பார்த்தவர்கள் இது ராஷ்மிகாவா என ஆச்சரியப்படுகிறார்கள். கோண்ட் இன பழங்குடி பெண் கேரக்டருக்காக அவர் கடும் உடற்பயிற்சி செய்து இருக்கிறார், பைக் சேசிங் காட்சியில் ரிஸ்க் எடுத்து நடித்து இருக்கிறார். குறிப்பாக, ஒரு அண்டர்வாட்டர் சண்டைக்காட்சியிலும் கையில் அரிவாள் ஏந்திய படி தைரியமாக நடித்து இருக்கிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள இந்த படமும், எம்.எஸ்.சுப்புலட்சுமி படமும் தனக்கு பாராட்டுகள், விருதுகளை அள்ளித்தரும் என ராஷ்மிகா நம்புகிறாராம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !