பிளாஷ்பேக்: விவேக்கை கதை நாயகனாக்கிய ராம நாராயணன்
ADDED : 18 hours ago
கே.பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட விவேக், காமெடி மற்றும் குணசித்ர நடிகராக ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 7 படங்களில் நாயகனாக நடித்துள்ளார். என்றாலும் அவரை முதன் முதலில் கதை நாயகனாக நடிக்க வைத்தது ராம நாராயணன்.
1991ம் ஆண்டு வெளியான 'செந்தூரதேவி' என்ற படத்தில் கதை நாயகனாக நடித்தார். ராம நாராயணன் தயாரித்து இயக்கிய படம். பேபி ஷாம்லியை மையமாக கொண்டு வெளியான இந்த படத்தில் விவேக்குடன் கனகா, செந்தில், வெண்ணிற ஆடை மூர்த்தி, கிட்டி, ஷீலா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதில் விவேக்&கனகா தம்பதிகளின் இரட்டை குழந்தையாக சிந்து மற்றும் நந்து கேரக்டரில் ஷாமிலி நடித்தார். படம் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றது.