தமிழில் ஹீரோயின் ஆன ஐஸ்வர்யா சர்மா
'டியூட்' படத்தில் 2வது நாயகியாக நடித்தவர் ஐஸ்வர்யா சர்மா. முன்னதாக விளம்பர படங்களில் நடித்து வந்த அவர் சில இந்திப் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். தற்போது 'ராவடி' படத்தின் மூலம் நாயகி ஆகியுள்ளார்.
இந்த படத்தில் பசில் ஜோசப் மற்றும் எல்.கே.அக்ஷய் குமார், ஜான் விஜய், சத்யன், ஜாபர் சாதிக், நோபல் ஜேம்ஸ், அருணாச்சலேஸ்வரன், ஷாரீக் ஹாஸன், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜென் மார்ட்டின் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் சார்பில். லலித் குமார் தயாரித்துள்ள இப்படம், தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகிறது. வரும் டிசம்பர் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
படம் பற்றி இயக்குனர் விக்னேஷ் வடிவேலு கூறும்போது, “இன்றைய இளைஞர்களை கவரும் வகையில், இளமை துள்ளலுடன் கூடிய காமெடி என்டர்டெயின்மென்டாக படம் உருவாகியுள்ளது. கலகலப்பான சம்பவங்கள், நகைச்சுவை நிறைந்த தருணங்கள், இளைஞர்களின் ரசனைக்கேற்ற திரைக்கதை என முழுமையான பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கும் வகையில் படம் உருவாகிறது” என்றார்.