உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஒரே ஒரு சீனில் வந்து தியேட்டரையே அதிர வைத்த நடிகர்கள்

ஒரே ஒரு சீனில் வந்து தியேட்டரையே அதிர வைத்த நடிகர்கள்


ஒரு திரைப்படம் வெற்றிபெற கதாநாயகனும் கதாநாயகியும் படம் முழுவதும் வர வேண்டும் என்ற அவசியமில்லை. சில கதாபாத்திரங்கள் திரையில் தோன்றுவது சில நிமிடங்கள் அல்லது சில நொடிகள் மட்டுமே. ஆனால், அவர்கள் கொடுக்கும் அந்த ஒரே ஒரு காட்சி, திரையரங்கையே திருவிழாவாக மாற்றி, ஒட்டுமொத்தப் படத்தின் போக்கையே மாற்றியமைத்துவிடும்.

தமிழ் சினிமா வரலாற்றில், மிகக் குறைந்த நேரமே திரையில் தோன்றினாலும், தங்கள் அசாத்தியமான நடிப்பு மற்றும் ஆளுமையால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் உரைய வைத்த, தியேட்டரையே அதிர வைத்த மூன்று புகழ்பெற்ற நடிகர்களைப் பற்றி இந்தத் தொகுப்பில் விரிவாகப் பார்ப்போம்.

1. சிவராஜ்குமார் - ஜெயிலர் :

கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகரான சிவராஜ்குமார். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படத்தில், 'நரசிம்மா' என்ற கதாபாத்திரத்தில் தோன்றிய நிமிடங்கள் மிகச் சிலவே. ஆனால், படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில், சிகரெட் புகைக்கு நடுவே, சுருங்கிய பார்வையோடும் கம்பீரமான நடையோடும் அவர் திரையில் அடி எடுத்து வைத்த அந்த நொடி, தமிழ்நாட்டுத் திரையரங்குகள் அனைத்தும் அதிர்ந்தன. அனிருத்தின் பின்னணி இசையும், சிவராஜ்குமாரின் அந்த அமைதியான கெத்தான நடிப்பும் இணைந்து, அந்த ஒற்றைக் காட்சியைப் படத்தின் மிகச்சிறந்த தருணமாக மாற்றியது. கன்னடத் திரையுலகைத் தாண்டி, தமிழ் ரசிகர்களின் நெஞ்சிலும் 'நரசிம்மா' நீங்காத இடம் பிடித்தார்.

2. சூர்யா - விக்ரம் :

தமிழ் சினிமாவின் டிரெண்ட் செட்டராக மாறிய 'விக்ரம்' திரைப்படத்தின் 'ரோலக்ஸ்' சூர்யா. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்த இத்திரைப்படத்தின் கடைசி ஐந்து நிமிடங்கள் வரை சூர்யா திரையில் தோன்றவே இல்லை. ஆனால், அந்த இறுதிப் பகுதியில் 'ரோலக்ஸ்' என்ற இரக்கமற்ற வில்லன் கதாபாத்திரத்தில் சூர்யா உள்ளே நுழைந்த விதம், திரையரங்கில் கூச்சலை உருவாக்கியது. இதுவரை கண்டிராத முற்றிலும் மாறுபட்ட கொடூரமான வில்லத்தனம், கூர்மையான பார்வை, மிரட்டலான வசன உச்சரிப்பு எனச் சில நிமிடங்களிலேயே ஒட்டுமொத்தப் படத்தையும் தன் பக்கத்திற்குத் திருப்பினார் சூர்யா. படத்தின் தொடர்ச்சிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை அந்த ஒரே ஒரு காட்சி ஏற்படுத்தியது.

3. சிவகார்த்திகேயன் - கோட் :

வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடித்த 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (The GOAT) திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் வருகை.படத்தின் பிற்பகுதியில், விஜய் துப்பாக்கியைக் கொடுத்து வில்லனை காட்டிஇனி இதைப் பார்த்துக்கோங்க என்று சிவகார்த்திகேயனிடம் ஒப்படைக்கும் அந்த ஒற்றைக் காட்சி, திரையரங்கை உச்சகட்ட ஆரவாரத்தில் மூழ்கடித்தது. தமிழ் சினிமாவின் அடுத்த தலைமுறைக்கான ஒரு அடையாளப்பூர்வமான மாற்றமாகவே இக்காட்சி ரசிகர்களால் பார்க்கப்பட்டது. மிகக் குறுகிய காலத்தில் தன் உழைப்பால் உயர்ந்த சிவகார்த்திகேயன், விஜய்யுடன் இணைந்து நடித்த அந்த சில நொடிகள், ரசிகர்களுக்குப் பேரின்ப அதிர்ச்சியாக இருந்தது.

நேரத்தின் அளவை வைத்து ஒரு நடிப்பின் ஆழத்தை அளவிட முடியாது என்பதற்கு இந்த ஐந்து நடிகர்களின் சிறப்புத் தோற்றங்களே சான்று. திரையில் சில நிமிடங்கள் மட்டுமே வந்தாலும், படம் முடிந்து வெளியே வந்த பிறகும் ரசிகர்களின் மனதை விட்டு நீங்காத அந்தத் தருணங்கள் என்றென்றும் சிறப்பு வாய்ந்தவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !