உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : இந்தியாவின் முதல் விண்வெளி படம்

பிளாஷ்பேக் : இந்தியாவின் முதல் விண்வெளி படம்

1960களில் ஹாலிவுட் படங்கள் சயின்ஸ் பிக் ஷன் படங்களாக வெளிவந்தது. அவற்றில் பல இந்தியாவிலும் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக வேற்று கிரகவாசிகள் பூமிக்கு வருவதும், இங்குள்ளவர்கள் அங்கு செல்வதுமான படங்கள் வந்தது. இதுபோன்ற ஒரு படத்தை தமிழில் உருவாக்க வேண்டும் என்று எம்ஜிஆர் நினைத்தார். தனது அபிப்ராயத்தை அப்போது சயின்ஸ் பிக் ஷன் கதைகளை எழுதிக் கொண்டிருந்த ஞானமூர்த்தி என்பவரிடம் ஒப்படைத்தார். அவர் எழுதிய கதைதான் 'கலை அரசி'.

தலைப்புக்கு ஏற்ற மாதிரி நாயகி பானுமதி சிறந்த பாடகி, நடன மங்கை. வேற்று கிரக வாசிகளின் தலைவனான எம்.என் நம்பியாருக்கு தங்கள் உலகில் கலை என்ற ஒன்று இல்லை. எனவே உலகத்தில் நன்றாக பாடக்கூடிய, ஆடக்கூடிய ஒருவரை கடத்திச் செல்ல தனது படையுடன் விண்வெளி கலத்தில் உலகத்திற்கு வருகிறார். வந்த இடத்தில் பானுமதியை கண்டுபிடித்து கடத்திச் செல்கிறார். பானுமதியின் காதலரான எம்ஜிஆர் ஒரு ஏழை விவசாயி. அவர் எப்படி நம்பியாரின் உலகத்திற்கு சென்று காதலியை மீட்டு வருகிறார் என்பதுதான் படத்தின் கதை.

பிரமாண்ட செட்டுகள் போட்டு சரோடி பிரதர்ஸ் படத்தை தயாரித்தனர். ஜே.ஜி.விநாயகம் ஒளிப்பதிவு செய்தார், கேவி.மகாதேவன் இசை அமைத்தார். படத்தை அன்றைய மீடியாக்கள் பாராட்டியது, பாலிவுட்டும் இந்த படத்தை ரீமேக் செய்தது. ஆனாலும் தமிழ்நாட்டில் படம் வெற்றி பெறவில்லை. காரணம் இதில் வழக்கமான எம்ஜிஆர் இல்லை. அதோடு கதை மக்களுக்கு புரியவில்லை, புரிந்தவர்கள் நம்பவில்லை. தற்போது யுடியூபில் காணக்கிடக்கிறது. இப்போது பார்த்தாலும் ஆச்சர்யப்பட வைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

சசிக்குமார் திருப்பூர்
2026-09-26 18:22:46

இரண்டு எம்ஜிஆர். விண்வெளியில் நடக்க முடியாது இதெல்லாம் ஆச்சரியம்