உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அக்டோபர் 8ல் ஓடிடிக்கு வரும் சூரியின் 'மண்டாடி'

அக்டோபர் 8ல் ஓடிடிக்கு வரும் சூரியின் 'மண்டாடி'


மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி, சுகாஸ், சத்யராஜ், மகிமா நம்பியார், பால சரவணன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான படம் 'மண்டாடி'. படகு போட்டியும் அதன் பின்னணியில் உள்ள அரசியலும் கலந்த கதையில் உருவான இந்த படம் கடந்த செப்டம்பர் 10ம் தேதி வெளியானது. இந்நிலையில் உலக அளவில் இந்த படம் 150 கோடி வசூலித்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது.

இதன் மூலம் இப்படம் சூரியின் கேரியரில் ஒரு முக்கிய படமாக அமைந்திருக்கிறது. இதையடுத்து அவர் 'அயலான்' ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்க போகிறார். இந்த நிலையில் அக்டோபர் 8ம் தேதி முதல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் மண்டாடி படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !