உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஐந்து நிமிடங்களுக்கு பிரதமராக மாறி உரையாற்றிய சஞ்சய் தத்

ஐந்து நிமிடங்களுக்கு பிரதமராக மாறி உரையாற்றிய சஞ்சய் தத்

நடிகர் சஞ்சய் தத் சமீபத்தில் நடிகர் சேகர் சுமனின் 'சேகர் டுநைட் என்கிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போது, இந்திய மக்கள் மிகவும் அன்பானவர்கள், இங்கே அமைதி நிலவ வேண்டும், நம் ஊரில் இப்போது அமைதியை என்னால் உணர முடியவில்லை என்று பேசியது தற்போது சலசலப்பை ஏற்படுத்தியது. தற்போது அது குறித்து வருத்தம் தெரிவித்து விளக்கமும் அளித்துள்ளார் சஞ்சய் தத். அது மட்டுமல்ல, அது ஒரு ஸ்கிரிப்ட் என்றும் தெரிவித்துள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் அவரை இந்தியாவின் பிரதமராக ஐந்து நிமிடங்களுக்கு கற்பனை செய்து கொண்டு பேசும்படி சொல்லப்பட்டது. அப்போது அவர் தன்னுடைய 'முன்னாபாய்' கதாபாத்திரப் பாணியில் நையாண்டியுடன் பேசினார்.. அதில் அவர் பிரதமர் போல பேசும்போது, நாட்டின் பல இடங்களில் தலைவர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன, ஆனால் தனிப்பட்ட ஒருவரின் படங்களை விட காந்தியடிகளின் சிந்தனைகளும் தேசமும் தான் பெரிதாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறித்து கூறும்போது, உலகில் ஏற்கனவே பல ஏவுகணைகள் உள்ளன, சண்டைகளை வளர்க்காமல் அன்பையும் தேநீரையும் பகிர்ந்து கொள்ளுங்கள் என்றும் பேசினார் சஞ்சய் தத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !