நல்ல கதாபாத்திரம் அமைந்தால் மட்டுமே இனி மலையாளத்தில் நடிப்பேன் : ஷிவதா
தமிழில் 'நெடுஞ்சாலை' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஷிவதா. அதன் பிறகு 'அதே கண்கள்', 'கருடன்', தடயம் 'கருப்பு' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இன்னொரு பக்கம் மலையாளத்திலும் இடைவெளி விடாமல் நடித்து வருகிறார். ஆனால் சமீப நாட்களாக மலையாளத்தை விட தமிழில் முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது 'மெய்யழகன்' இயக்குனர் பிரேம்குமாரின் அடுத்த படத்தில் பஹத் பாசிலுக்கு மனைவியாக நடிக்கிறார். அது மட்டுமல்ல, கவின் நடிக்கும் 'பேர் சொல்லும் பிள்ளை' படத்திலும் நடிக்கிறார்.
மலையாளத்தை விட தமிழில் தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்கள் கிடைக்கின்றன என்றும், மலையாளத்தில் கணவனை உற்சாகப்படுத்தும் நல்ல மனைவி, மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் கதாபாத்திரம் என திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான கதாபாத்திரங்களே தேடி வருகின்றன, அதனால் இனி நான் மலையாளத்தில் நடிக்கும் படம் எனக்கு ஒரு கம்பேக் ஆக அமையும் கதை மற்றும் கதாபாத்திரத்துடன் வந்தால் மட்டுமே ஒப்புக்கொள்வேன் என்று வெளிப்படையாகவே கூறியுள்ளார்.