உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹிந்தி 'திரிஷ்யம் 3'-க்கு மலையாள ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு

ஹிந்தி 'திரிஷ்யம் 3'-க்கு மலையாள ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு

மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான 'திரிஷ்யம்' படத்தின் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. மூன்றாம் பாகத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு 'திரிஷ்யம் 3' வெளியானது. படம் 200 கோடிக்கு மேல் வசூலித்தாலும், ரசிகர்கள் எதிர்பார்த்த திருப்தியை மூன்றாம் பாகம் அவர்களுக்கு கொடுக்கவில்லை.

அதேசமயம் ஹிந்தியில் தொடர்ந்து இந்த படம் அஜய் தேவ்கன் நடிப்பில் அடுத்தடுத்த பாகங்கள் ரீமேக் செய்யப்பட்டு வந்தது.. தற்போது இதன் மூன்றாம் பாகம் சமீபத்தில் வெளியானது.. இந்த மூன்றாம் பாகத்தில் மலையாள ஒரிஜினல் கதையை இவர்கள் கையாளாமல் ஹிந்திக்கென சொந்தமாகவே உருவாக்கி இருந்தனர்.

இந்த நிலையில் படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று மூன்றே நாட்களில் 250 கோடி வசூலித்துள்ளது.. அது மட்டுமல்ல, படம் பார்த்த மலையாள ரசிகர்கள் கூட இந்த ஹிந்தி பதிப்பு மூன்றாம் பாகத்தின் க்ளைமாக்ஸ் அருமையாக இருப்பதாகவும், மோகன்லால் படத்தை காட்டிலும் இந்தப்படம் மிகச்சிறப்பாக இருப்பதாகவும் சோசியல் மீடியாக்களில் பாராட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !