நிஜத்தில் தயாரிக்கப்பட்ட ரோபோ நடிப்பில் கன்னடத்தில் உருவாகியுள்ள 'லம்போதரா 2.0'
ADDED : 1 days ago
இதுவரை வந்த சயின்ஸ் பிக்ஷன் படங்களில் ரோபோக்கள் இடம்பெற்றிருந்தாலும், அவற்றை அனிமேஷன் அல்லது வி.எப்.எக்ஸ் முறையில் தான் பயன்படுத்தி உருவாக்கி வந்தார்கள். இந்த நிலையில், தற்போது கன்னடத்தில் உருவாகி வரும் 'லம்போதரா 2.0' படத்தில் நிஜமாகவே உருவாக்கப்பட்ட ஒரு ஹியூமனாய்டு ரோபோவை (Humanoid Robot) முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துப் படப்பிடிப்பு நடத்தியுள்ளார்கள்.
'ஜியா' என்கிற கதாபாத்திரத்தில் இந்த ரோபோ நடித்துள்ளது. பெங்களூரைச் சேர்ந்த 'மச்சாணி ரோபோட்டிக்ஸ்' நிறுவனம்தான் இந்த ஜியா ரோபோவை உருவாக்கியுள்ளது. இந்தப் படத்தை பிரபல கன்னட இயக்குனர் சிம்பிள் சுனி இயக்கியுள்ளார். ஜென்-ஸி தலைமுறையின் வாழ்க்கை முறை, சமூக வலைதளங்களின் தாக்கம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.