சிரஞ்சீவியின் 'விஸ்வம்ப்ரா' யூனிட் மவுனம் காப்பது ஏன்?
நடிகர் சிரஞ்சீவி இளம் நடிகர்களுக்கு சவால் விடும் வகையில் தொடர்ந்து படங்களை ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார். இந்த வகையில், சமீப நாட்களாக அவர் பாபி கொல்லி இயக்கத்தில் நடித்து வரும் 'காக' படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதே சமயம், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே வசிஷ்டா இயக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட 'விஸ்வம்ப்ரா' திரைப்படம் குறித்து எந்தவித அப்டேட் தகவல்களும், ரிலீஸ் தேதி குறித்தும் செய்திகள் வெளியாகவே இல்லை.
திரிஷா, ஆஷிகா ரங்கநாத் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ள இந்தப் படம் இந்த வருடமே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அதே சமயம், தற்போது படத்தின் கிராபிக்ஸ் மற்றும் வி.எப்.எக்ஸ் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உள்ளதால், அதன் பணிகளில் படக்குழுவினர் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். அதனால்தான், அந்தப் பணிகள் முடியும் வரை இடையில் விளம்பரங்களோ அல்லது ரிலீஸ் தேதி குறித்தோ எந்த அப்டேட் தகவல்களையும் வெளியிடாமல் அமைதி காத்து வருகின்றனர் என்று சொல்லப்படுகிறது.