உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோயினாக நடித்த கவுதமி

பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோயினாக நடித்த கவுதமி


கவுதமி ஆரம்ப காலங்களில் கிராமிய படங்களில் அதிகம் நடித்தார். அதன்பிறகு பெரிய நடிகர்களுடன் கமர்ஷியல் படங்களில் நடித்தார். அப்படியான காலகட்டத்தில் அவர் ஆக்ஷன் ஹீரோயினாக 'ருத்ரா' என்ற படத்தில் நடித்தார்.

ஒரு போலீஸ் அதிகாரியால் தண்டனை பெற்ற வில்லன் சிறையில் இருந்து தப்பி வந்த அந்த அதிகாரியின் குடும்பத்தை அழிப்பான். அதில் தப்பி பிழைக்கிறவர் அவரது மகள் ருத்ரா (கவுதமி) மட்டும். கொலை செய்த குற்றவாளி மீண்டும் ஜெயிலுக்குள் சென்று விடுவதால் அவனை எதுவும் செய்ய முடியாமல் போகிறது. இதனால் ருத்ரா கே.பாக்யராஜ் பற்றி கேள்விப்படுகிறார். அவர் ஒரு புத்திசாலியான திருடர். அவருடன் இணைந்து தன் குடும்பத்தை அழித்தவனை எப்படி பழிவாங்குகிறார் என்பதுதான் படத்தின் கதை.

இந்த படத்தை சசிமோகன் என்பவர் இயக்கினார். லட்சுமி, மன்சூரலிகான், செந்தாமரை, டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கங்கை அமரன் இசை அமைத்திருந்தார்கள். படம் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !