உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வெப் தொடர் இயக்கும் மதுமிதா

வெப் தொடர் இயக்கும் மதுமிதா


தமிழ் சினிமாவின் பெண் இயக்குநர்களில் முக்கியமானவர் மதுமிதா. 'வல்லமை தாராயோ, கொல கொலையா முந்திரிக்கா, மூணே மூணு வார்த்தை, கேடி என்கிற கருப்புதுரை', உள்ளிட்ட பல படங்களை இவர் இயக்கியவர். 'கேடி என்கிற கருப்பு துரை' படத்தை இந்தியில் அபிஷேக் பச்சன் நடிப்பில் 'கலாப்தீர் லாப்தா' என்ற பெயரில் இயக்கினார்.

இந்த நிலையில் அவர் தற்போது 'லவ் ஆல்வேஸ்' என்ற வெப் தொடரை இயக்கி உள்ளார். இதில் நடிகை கவுரி கிஷன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருடன் ஜெயபிரகாஷ், ஜெயசுதா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். வருகிற 30ம் தேதி முதுல் ஜீயோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது. கொரிய மொழியில் வெளியான 'ஹியர் வி கோ அகைன்' என்கிற பிரபல வெப் தொடரை தழுவி இந்த சீரிஸ் உருவாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !