உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ஜெயிலர்-2' மூலம் தமிழுக்கு வரும் பாலிவுட் நடிகை

'ஜெயிலர்-2' மூலம் தமிழுக்கு வரும் பாலிவுட் நடிகை


ஜெயிலர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால்பதிக்கிறார், பாலிவுட் நடிகை அபிக்ஷா போர்வால். 'ஹனிமூன் போட்டோகிராபர்', 'சால்ட் சிட்டி', 'பதாய் தோ' உள்ளிட்ட படங்களில் நடித்தார். 'உண்டேகி' என்ற வெப் தொடரிலும் நடித்தார்.

தற்போது அதிரடி ஆக்ஷன் ஹீரோயினாக ஜெயிலர் 2வில் அறிமுகமாகிறார். ஜெயிலர் ரஜினிக்கு ஆதரவாக களம் இறங்கும் அதிரடிப்படை வீராங்கணையாக அவர் நடிப்பதாக கூறப்படுகிறது. படத்தில் அவருக்கு இரண்டு சண்டை காட்சிகளும் இருப்பதாக கூறப்படுகிறது.

'மிஸ் திவா', 'மிஸ் டில்லி' பட்டத்தையும் வென்றிருக்கிறார். முறைப்படி தற்காப்பு கலைகள் மற்றும் கதக் நடனம் ஆகியவற்றைப் கற்றுக் கொண்டிருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !