உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 14 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் அக் ஷய் குமார் - மாதவன்

14 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் அக் ஷய் குமார் - மாதவன்

கடந்த 2012-ல் ஹிந்தியில் 'ஹவுஸ்புல் 2' திரைப்படம் வெளியானது. இதில் அக் ஷய் குமார், மாதவன் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இந்த நிலையில் 14 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய படத்தில் இவர்கள் இணைகின்றனர். ஏக்தா கபூர் தயாரிக்கும் இப்படத்தை சஜித் கான் இயக்குகிறார்.

கதாநாயகிகளாக திஷா பதானி மற்றும் ஸ்ரேயா சரண் ஆகியோர் நடிக்கின்றனர். நடுத்தர வயது ஆண்களை மையமாகக் கொண்டு பல சுவாரசியமான நகைச்சுவை மற்றும் குழப்பங்கள் நிறைந்த அம்சங்களுடன் இப்படம் தயாராகிறது. இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் லண்டனில் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !