அடுத்த குழந்தையை எதிர்நோக்கி... : குட் நியூஸ் சொன்ன கியாரா அத்வானி
ADDED : 7 hours ago
பாலிவுட்டில் முன்னணி நடிகை கியாரா அத்வானி. எம்.எஸ்.தோனி : தி அன்டோல்ட் ஸ்டோரி, கபீர் சிங், லஸ்ட் ஸ்டோரிஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கேம் சேஞ்சர், டாக்சிக் போன்ற தென்னிந்திய படங்களிலும் நடித்துள்ளார். பாலிவுட்டின் இளம் முன்னணி நடிகரான சித்தார்த் மல்கோத்ராவை காதலித்து கடந்த 2023ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதியருக்கு சரயா என்ற பெண் குழந்தை கடந்தாண்டு பிறந்தது. இந்நிலையில் கியாரா அத்வானி தான் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கியாரா, சித்தார்த் மற்றும் சரயா ஆகியோரின் கைகளுடன் குழந்தையின் கால் சாக்ஸை பதிவிட்டு இதை அறிவித்துள்ளார் கியாரா.
சித்தார்த், கியாரா ஆகியோருக்கு ரகுல் ப்ரீத் சிங், கரண் ஜோகர் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.