உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சென்சார் சிக்கலில் 'கராத்தே பாபு'

சென்சார் சிக்கலில் 'கராத்தே பாபு'


'டாடா' படத்தை இயக்கிய கணேஷ் கே பாபு இயக்கத்தில், ரவி மோகன், தவுதி எஸ் ஜிவால் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கராத்தே பாபு'. இப்படத்தை இந்த வருடத்தின் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டு ஜனவரி மாதத்திலேயே படத்தின் டீசரை வெளியிட்டார்கள்.

அரசியல் சார்ந்த படமாக உருவாக்கப்பட்ட இந்தப் படத்தின் டீசரைப் பார்த்ததும் பல்வேறு யூகங்கள் எழுந்தன. யாரை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது என்ற விவாதமும் வந்தது.

கோடை விடுமுறை வெளியீடு என்று அறிவித்தவர்கள், அப்போது படத்தை வெளியிடாமல் பின்னர் ஆகஸ்ட் 28 வெளியீடு எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். ஆனால், அப்போதும் படம் வெளியாகவில்லை. பத்து நாட்களுக்குப் பிறகு தேதி குறிப்பிடாமல் விரைவில் வெளிவருகிறது என்று மட்டும் அறிவித்தார்கள்.

இந்த மாதத்தில் படத்தை வெளியிட முடிவு செய்து சென்சாருக்கு படத்தை அனுப்பியுள்ளார்கள். ஆனால், படத்தைப் பார்த்த குழுவினர் நிகழ் காலத்தில் உள்ள சில அரசியல் கட்சித் தலைவர்களைக் குறிப்பிடும் விதத்தில் காட்சிகள் இருப்பதாக ஆட்சேபித்துள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. தற்போது படம் ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள். அவர்கள் பார்த்த பின்புதான் படத்தின் நிலை என்னவென்பது தெரிய வரும்.

விஜய்யின் கடைசி படமாக அறிவிக்கப்பட்ட 'ஜனநாயகன்' படத்திற்கும் இப்படியொரு நிலை வந்து படம் தள்ளி வைக்கப்பட்டது. ஐந்து மாதங்களுக்குப் பிறகே படம் வெளியானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !