நயன்தாரா அரசியலுக்கு வருகிறாரா? கணவர் விக்னேஷ்சிவன் சொன்ன பதில்
ADDED : 14 hours ago
நடிகை நயன்தாரா அரசியலுக்கு வருகிறாரா என்ற கேள்விக்கு, இயக்குனரும், அவர் கணவருமான விக்னேஷ்சிவன் சரியான பதிலை அளித்துள்ளார். சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இது குறித்து விக்னேஷ்சிவனிடம் நிருபர்கள் கேட்க, ''இப்ப அவங்க தாயார் ஆகிவிட்டாங்க. குடும்பத்தை, வீட்டை பார்ப்பதில் கவனம் செலுத்துகிறார். அதில் நிறைவு, சந்தோஷம் கிடைக்கிறது'' என பதில் சொன்னார்.
இதனால் நயன்தாரா இப்போதைக்கு அரசியலுக்கு வரவில்லை என தெரிகிறது. 2031 தேர்தலில் தனுஷ், லெஜன்ட் சரவணன், ரவிமோகன், விஷால், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி ஆகியோர் அரசியலுக்கு வரலாம். அந்த தேர்தலில் நேரடியாக களம் இறங்கலாம் அல்லது மறைமுக அரசியலில் இருக்கலாம் என செய்திகள் பரவும் நிலையில், நயன்தாரா அரசியலுக்கு வருகிறாரா என்பது பரபரப்பான விவாதமாகி இருக்கிறது.