சிவகார்த்திகேயன் 27வது படம் : இன்று முக்கிய அப்டேட்
சத்யஜோதி தியாகராஜன் தயாரிப்பில், பார்க்கிங் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கயாடு லோஹர் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை 5.27க்கு வர உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இது சிவகார்த்திகேயன் நடிக்கும் 27 படம். இது என்னவாக இருக்கும் என ரசிகர்கள் மனதில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அனேகமாக படத்தின் தலைப்பாக இருக்கலாம். அதோடு படத்தின் இசையமைப்பாளர் பற்றிய அறிவிப்பாக கூட இருக்கலாம் என்கிறார்கள். இன்னும் ஒரு தரப்போ பட ரிலீஸ் தேதி, அல்லது படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கும் நடிகர்கள் அல்லது படத்தில் பங்குபெறும் டெக்னீஷியன்கள் குறித்த அறிவிப்பாக இருக்கலாம் என்கிறார்கள். இப்போது கமல்ஹாசன் தயாரிக்கும் சேயோன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். அந்த படம் பொங்கலுக்கு பின் ரிலீஸ் ஆகிறது.