சிம்பு வெளியிட்ட 'டெலிவரி பாய்' டிரைலர் : ஹீரோ யார் தெரியுமா?
லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'டெலிவரி பாய்'. இந்த படத்தின் டிரைலரை முன்னணி நடிகர் சிம்பு அலைஸ் சிலம்பரசன் வெளியிட்டுள்ளார். நானி எழுதி இயக்கியுள்ள இந்த படம் வரும் அக்டோபர் 23ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
அம்மா - மகன் பாசத்துடன் தொடங்கும் இந்த டிரைலரில் அடுத்தடுத்த காட்சிகளில் எதிர்பாராத திருப்பங்களுடன் நகர்கிறது. சிறு வயது முதலே ஒன்றாக வளர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் ஏழு பேரின் பின்னணியில், அவர்களிடம் சிக்கிக் கொள்ளும் கதாநாயகனின் வாழ்க்கை எப்படிப் பாதிக்கப்படுகிறது, அதன் மூலம் அவன் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்னென்ன என்பதை சுவாரஸ்யமாக வெளிப்படுத்துகிறது. உணர்வுபூர்வமான குடும்பப் பின்னணியுடன் குற்றச் செயல்கள் சார்ந்த சம்பவங்களும் இணைந்துள்ளது. ஒரு சாதாரண டெலிவரி பாயின் வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத சம்பவங்கள் அவனை எந்தப் பாதைக்கு அழைத்துச் செல்கின்றன என்பதே படக் கதையாம்.
லியோ சிவக்குமாருக்கு ஜோடியாக பிரிகிடா சாகா நடித்துள்ளார். ராதிகா சரத்குமார், லியோ சிவக்குமாரின் தாயாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் காளி வெங்கட், போஸ் வெங்கட், ஜென்சன் திவாகர், துஷ்யந்த், உதயா தீப் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். திண்டுக்கல் லியோனி மகன் ஹீரோ லியோ சிவக்குமார்.